/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
வேளாங்கண்ணி ஆலயத்தில் போப்பிற்கு அஞ்சலி ஊர்வலம்
/
வேளாங்கண்ணி ஆலயத்தில் போப்பிற்கு அஞ்சலி ஊர்வலம்
ADDED : ஏப் 25, 2025 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்:நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயம் சார்பில், மறைந்த போப்பிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.
பங்கு பாதிரியார் அற்புதராஜ் தலைமையில், பாதிரியார்கள், பேரூராட்சி சேர்மன் டயானா ஷர்மிளா, துணை சேர்மன் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தேவாலய வாயிலில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி முக்கிய வீதிகளில் மவுன ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து நடந்த சிறப்பு திருப்பலியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

