/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
சிறுவர்கள் நடத்திய விநாயகர் வீதியுலா
/
சிறுவர்கள் நடத்திய விநாயகர் வீதியுலா
ADDED : ஆக 28, 2025 06:53 AM
நாகப்பட்டினம்: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, நாகையில் ஹிந்து முன்னணி சார்பில், 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நாகை ஆரிய நாட்டுத்தெரு மீனவ கிராமத்தில், விநாயகர் வீதியுலா நடந்தது.
வாசலில் வண்ண கோலமிட்டு காத்திருந்த மக்கள், விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேள தாளம் முழங்க சிறுவர்கள் உற்சாக நடனமாடி விநாயகரை வீதியுலாவாக, வாகனத்தில் இழுத்து சென்றனர்.
வரும் செப்., 7ல், 25 விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக புதிய கடற்கரைக்கு கொண்டு சென்று, படகில் எடுத்துச் சென்று கடலில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செழியன் கூறுகையில், ''மக்களிடையே ஆன்மிக சிந்தனையை ஏற்படுத்தவும், இளைய தலைமுறையினர் விநாயகர் பெருமையை அறிந்து கொள்ளவும், சிறுவர்களால் விநாயகர் சிலை ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டது,'' என்றார்.