/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
ரூ.1.50 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்
/
ரூ.1.50 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்
ADDED : ஏப் 27, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்: நாகை, வெளிப்பாளையம் போலீசார், புதிய பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
பையில், 1.50 கிலோ திமிங்கல எச்சம் இருந்தது. விசாரணையில், அவர், கன்னியாகுமரி அடுத்த விளவன்கோட்டையை சேர்ந்த மில்டன், 29, என, தெரியவந்தது. போலீசார் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

