/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
ஹஜ் பயணம் தாமதம் ஏன்? இந்திய ஹஜ் சங்க தலைவர் பேட்டி
/
ஹஜ் பயணம் தாமதம் ஏன்? இந்திய ஹஜ் சங்க தலைவர் பேட்டி
ஹஜ் பயணம் தாமதம் ஏன்? இந்திய ஹஜ் சங்க தலைவர் பேட்டி
ஹஜ் பயணம் தாமதம் ஏன்? இந்திய ஹஜ் சங்க தலைவர் பேட்டி
ADDED : மே 07, 2025 02:08 AM

நாகப்பட்டினம்:இந்தியாவில் இருந்து ஹஜ் பயணிகள் 30 ஆயிரம் பேர் பயண தாமதத்திற்கு, மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லை என, இந்திய ஹஜ் சங்க தலைவர் அபூபக்கர் கூறினார்.
நாகை அடுத்த நாகூர் தர்காவிற்கு நேற்று வருகை தந்த அவர் கூறியதாவது:
இஸ்லாமியர்களுக்கு 2025ம் ஆண்டு சிறப்பான ஹஜ் யாத்திரையாக இருக்கும். 1 லட்சத்து 25 ஆயிரத்து 468 பேர் காஷ்மிரில் இருந்து கன்னியாக்குமரி வரை சிறப்பாக யாத்திரை செல்கின்றனர். இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 14 விமானங்கள் சென்றுள்ளன. ஹஜ் முகவர்கள் சிறிய கவனக்குறைவால் 30 ஆயிரம் பேர் காத்திருக்கும் நிலை. ஹஜ் பயண தாமதத்திற்கு, மத்திய அரசுக்கோ, சவுதி அரேபியாவிற்கோ எந்த விதமான சம்பந்தமும் இல்லை. குறித்த நேரத்தில் விசாவை பதிவிறக்கம் செய்யாதது தான் காலதாமதத்திற்கான காரணம்.
காலதாமதத்திற் உள்ளான ஹாஜிக்கள், 2026 ம் ஆண்டு ஹஜ் பயணம் கண்டிப்பாக மேற்கொள்வார்கள். இதற்கான உத்தரவை மத்திய அரசு வழங்கி விட்டது.
வரும் ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், இஸ்லாமியர் ஒருவருக்காவது ஏதேனும் ஒரு இணை அமைச்சர் பதவியை பிரதமர் மோடி வழங்க வேண்டும். இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கான பிரச்னைகள் உடனுக்குடன் சரி செய்யப்படும். அமைச்சர் பதவி கொடுத்தால், 40 கோடி இஸ்லாமியர்கள் மத்திய அரசுக்கு கடமைபட்டவர்கள் ஆவோம் என்றார்.
முன்னதாக, தர்காவிற்கு வந்த அவருக்கு தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு துவா ஓதப்பட்டது.

