/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரயில் பாதை மேற்பரப்பில் மேம்பாலம் அமைக்க ராட்சத கிரேனில் இரும்பு பீம் துாக்கி வைப்பு
/
ரயில் பாதை மேற்பரப்பில் மேம்பாலம் அமைக்க ராட்சத கிரேனில் இரும்பு பீம் துாக்கி வைப்பு
ரயில் பாதை மேற்பரப்பில் மேம்பாலம் அமைக்க ராட்சத கிரேனில் இரும்பு பீம் துாக்கி வைப்பு
ரயில் பாதை மேற்பரப்பில் மேம்பாலம் அமைக்க ராட்சத கிரேனில் இரும்பு பீம் துாக்கி வைப்பு
ADDED : அக் 20, 2024 01:48 AM
ரயில் பாதை மேற்பரப்பில் மேம்பாலம் அமைக்க
ராட்சத கிரேனில் இரும்பு பீம் துாக்கி வைப்பு
பள்ளிப்பாளையம், அக். 20-
அலமேடு பகுதியில், ரயில்பாதை மேற்பரப்பில் இரண்டு பில்லர்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்க, 5 இரும்பு பீம் ராட்சத கிரேன் மூலம் துாக்கி அமைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் பகுதியில் இருந்து பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பாலம் சாலை வரை, 3 கி.மீ., துாரத்திற்கு, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், 320.71 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை - கன்னியாகுமரி தொழிற் தடத்திட்டம் மூலமாக, மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள, 5 சதவீதம் பணிகளான அலமேடு பகுதியில், ரயில்பாதை மேற்பரப்பில் இரும்பு பீம் அமைக்க வேண்டும். இந்த பணிகள் முடிந்தால் மேம்பாலம் பணிகள் முழுமையாக முடிந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அலமேடு பகுதியில் செல்லும், ரயில் பாதையின் இரண்டு புறத்திலும் இரண்டு பில்லர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பில்லர்கள் இடையே இரும்பு பீம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு ரயில்வே துறையின் அனுமதி வாங்க வேண்டும். நேற்று முன்தினம் ரயில்வே துறை அனுமதியுடன் காலை, 11:00 முதல் மதியம், 2:00 மணி வரை அலமேடு பகுதியில் செல்லும் ரயில்பாதை மேற்பரப்பில், இரண்டு பில்லர்களுக்கு இடையே ராட்சத கிரேன் மூலம், 30 மீட்டர் நீளமுள்ள, 5 இரும்பு பீம் துாக்கி வைக்கப்பட்டது. ரயில்வே துறை, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உடனிருந்தனர்.