/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு பக்கத்து வீட்டு பெண்கள் உள்பட 4 பேர் கைது

ADDED : ஜன 25, 2025 01:17 AM
தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு பக்கத்து வீட்டு பெண்கள் உள்பட 4 பேர் கைது
பள்ளிப்பாளையம், : வீட்டில் தனியாக இருந்த  பெண்ணிடம் நகை பறித்த, 2 வாலிபர்களையும், உடந்தையாக இருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த, 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, அன்னை சத்யா நகர் பகுதியில், குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின், 2வது மாடியில் மல்லிகா, 55, என்பவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம், இவரது வீட்டிற்குள் புகுந்து, 2 வாலிபர்கள், அவரை தாக்கிவிட்டு, 15 பவுன் நகை, 35,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து, பள்ளிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், துாத்துக்குடியை சேர்ந்த அப்துல், 21, சாந்தகுமார், 21, என்பதும், மல்லிகாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஐஸ்வர்யா, 24, மணிமேகலை, 30, ஆகிய இருவரும், 'மல்லிகாவிடம் நகை, பணம் உள்ளது. மதிய நேரத்தில் தனியாக தான் இருப்பார். அப்போது வீட்டிற்கு வந்தால் நகை, பணத்தை பறிக்கலாம்' என, ஐடியா கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அப்துல், சாந்தகுமார், ஐஸ்வர்யா, மணிமேகலை ஆகிய, 4 பேரை கைது செய்து, 15 பவுன் நகை, 35,000 ரூபாயை மீட்டனர்.