/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'ஆதார்' இல்லாததால் உதவித்தொகை நிறுத்தம் கண், கால்கள் செயலிழந்து தவிக்கும் மூதாட்டி

ADDED : ஜன 29, 2025 01:18 AM
'ஆதார்' இல்லாததால் உதவித்தொகை நிறுத்தம் கண், கால்கள் செயலிழந்து தவிக்கும் மூதாட்டி
பள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையம் அருகே, ஒட்டமெத்தையை சேர்ந்தவர் மாரக்கா, 62; தனியாக வசித்து வருகிறார். இவருக்கு பிறவியிலேயே கண் பார்வை இல்லை. மேலும், இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. ஆதரவற்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, 1,500 ரூபாயை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில், மாரக்காவுக்கு, 'ஆதார்' எண் இல்லாததால், கடந்த, மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் இருந்தால் மட்டுமே மீண்டும் உதவித்தொகை வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். ஆனால், இரண்டு கண்களும் முழுமையாக தெரியாத நிலையில், கண் கருவிழி இல்லாததால், 'ஆதார்' கார்டு பெற முடியாத நிலை உள்ளது. மேலும், இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் தவித்து வரும் மூதாட்டி மாரக்கா, உதவித்தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினோம். 'ஆதார்' அட்டை பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்துள்ளோம். மாரக்காவுக்கு விரைவில் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.