/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் '1077' அறிவிப்பு
/
நாமக்கல்லில் பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் '1077' அறிவிப்பு
நாமக்கல்லில் பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் '1077' அறிவிப்பு
நாமக்கல்லில் பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் '1077' அறிவிப்பு
ADDED : அக் 20, 2024 01:49 AM
நாமக்கல்லில் பேரிடர் காலத்தில் தொடர்பு கொள்ள
கட்டணமில்லா தொலைபேசி எண் '1077' அறிவிப்பு
நாமக்கல், அக். 20-
நாமக்கல் கலெக்டர் உமா தலைமையில், 2024ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், அரசு, தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், எண்ணெய் நிறுவனங்கள், மொபைல்போன் சேவை நிறுவனங்கள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவன அமைப்புகள் கலந்து கொண்டன.
பின்னர் கலெக்டர் உமா பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ நிறுவனங்களுக்கு, குறிப்பாக ஐ.சி.யு.,- சி.சி.யு.,- என்.ஐ.சி.யு போன்றவற்றுக்கு தடையில்லா மின்சாரம் இருப்பதையும், போதுமான பவர் பேக்கப் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனை, வட்ட மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒரு வாரத்திற்கு அவசர நிலையைச் சமாளிக்க ஆக்சிஜன் சப்ளை, மருத்துவமனைகளில் ஏதேனும் அவசரநிலையை சமாளிக்க வென்டிலேட்டர்கள் போன்ற உயிர்காக்கும் கருவிகள் போதுமான அளவில் சார்ஜ் செய்ய வசதி செய்ய வேண்டும்.
நிறுவப்பட்ட அனைத்து தீயணைப்பு உபகரணங்களும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையால் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி புதுப்பிக்கப்படவேண்டும் மற்றும் பயன்பாட்டிற்கு தயாராக வைக்கப்பட வேண்டும். மருத்துவமனை பாதுகாப்பு திட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை திட்டத்தினை மேம்படுத்தி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள, 33 பகுதிகளில் வாழும் மக்களுக்கு பேரிடர் குறித்து மண்டலக் குழுக்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பேரிடர் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 மற்றும், 04286 299137 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
டி.ஆர்.ஓ., சுமன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.