தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கேரளா, ஆந்திரா மாநில போலீசார் வெப்படை போலீஸ் ஸ்டேஷன் வருகை

கேரளா, ஆந்திரா மாநில போலீசார் வெப்படை போலீஸ் ஸ்டேஷன் வருகை

கேரளா, ஆந்திரா மாநில போலீசார் வெப்படை போலீஸ் ஸ்டேஷன் வருகை


ADDED : அக் 04, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரளா, ஆந்திரா மாநில போலீசார்

வெப்படை போலீஸ் ஸ்டேஷன் வருகை

பள்ளிப்பாளையம், அக். 4-

வெப்படையில் பிடிபட்ட, ஏ.டி.எம்., கொள்ளையர்களின் வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்களை வாங்குவதற்காக கேரளா, ஆந்திரா மாநில போலீசார், நேற்று வெப்படை போலீஸ் ஸ்டேஷன் வந்தனர்.

கேரள மாநிலத்தில் கடந்த, 27ம் தேதி மூன்று ஏ.டி.எம்., மையங்களில், 66 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து, கன்டெய்னர் லாரியில் கொள்ளையர்கள் தப்பி சென்றனர். இவர்களை நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே வெப்படை அடுத்த செட்டியார்கடை பகுதியில், போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். துப்பாக்கி சூட்டில் கொள்ளையன் ஜூமாந்தின், 37, சம்பவ இடத்திலேயே பலியானார். குண்டு காயத்துடன் பிடிபட்ட அசர் அலி, 28, என்பவரை கைது செய்தனர். கன்டெய்னர் லாரியில் இருந்த இர்பான், சவுக்கீன் கான், முகமுது இக்ரம், சபீர், முபாரக் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏ.டி.ஏம்., கொள்ளை கும்பல் இந்தியாவில், ஏழு மாநிலங்களில் தங்கள் கைவரிசை காட்டியுள்ளனர். விசாகப்பட்டினம் பகுதியில் கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், ஒன்பது ஏ.டி.எம்., மையங்களில், 1.67 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளது தெரிகிறது.

இந்நிலையில், பிடிபட்ட ஏ.டி.எம்., கொள்ளையர்கள் மீது, பதியப்பட்ட வழக்கு சம்பந்தமான கோப்புகளை வாங்குவதற்காக, நேற்று காலை கேரளா, ஆந்திரா மாநில போலீசார் வெப்படை போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். அவர்களை கேரளாவுக்கு அழைத்து செல்ல, சேலம் மத்திய சிறையில் மனு அளித்துள்ளனர். குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை பெற்று, கேரளா மாநிலம், திருச்சூருக்கு கொண்டு சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி, பின்னர் காவலில் வைத்து விசாரணையை துவங்க உள்ளதாக கேரளா போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, ஆந்திரா மாநில போலீசாரும் காவலில் எடுத்து விசாரிப்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us