அரசு, தனியார் நீரோடைகளை அளந்து அத்துக்கல் நட்டுதர கோரி மனு வழங்கல்
அரசு, தனியார் நீரோடைகளை அளந்து அத்துக்கல் நட்டுதர கோரி மனு வழங்கல்
ADDED : பிப் 07, 2025 01:05 AM
அரசு, தனியார் நீரோடைகளை அளந்து அத்துக்கல் நட்டுதர கோரி மனு வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளிடம், விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ர மணியம் தலைமையிலான, சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் சுற்று பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதில், 25 அரசு நீரோடை, 45 தனியார் நீரோடைகளை அளந்து அத்துக்கல் நட்டு தர வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்க, குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றமே கூறியுள்ளது. எனவே, உடனடியாக காலதாமதம் இன்றி அரசு நீரோடை, தனியார் நீரோடைகளை அளந்து அத்துக்கல் காட்ட வேண்டும்.
துார் வாருவதற்கு சம்பந்தப்பட்ட பொதுப்பணி, நீர்வள ஆதாரத்துறை, உள்ளாட்சி ஊரக வளர்ச்சி துறை ஆகியவற்றிற்கு பரிந்துரை செய்திட வேண்டும். மேலும், இந்த இடங்களை அளந்து அத்துக்கல் காட்ட மறுப்பதற்கான காரணத்தை, மோகனுார் தாசில்தார் மற்றும் சர்வேயர் ஆகியோரிடம் இருந்து, கடிதம் மூலம் பெற்று தர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
