தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் - சேலம் சாலையில் கடும் பனி மூட்டத்தால் அவதி

நாமக்கல் - சேலம் சாலையில் கடும் பனி மூட்டத்தால் அவதி

நாமக்கல் - சேலம் சாலையில் கடும் பனி மூட்டத்தால் அவதி


ADDED : பிப் 08, 2025 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 12:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல் - சேலம் சாலையில் கடும் பனி மூட்டத்தால் அவதி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நடப்பாண்டு தொடக்கம் முதல் பனியின் தாக்கம் இருந்து வருகிறது. சில நாட் களாக, நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பனியின் தாக்கம் அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, நாமக்கல் - சேலம் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது.

இது, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதால், தங்கள் வாகனங்களை மெதுவாக ஓட்டிச்சென்றனர்.

மேலும், குளிர்ந்த காற்று வீசியதால் கடும் குளிர் நிலவியது.இதனால், அதிகாலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்கள், நடை பயிற்சிக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். காலை, 10:00 மணிக்கு பிறகே சூரியக்கதிர்கள் பூமியில் விழத்தொடங்கின. அதை தொடர்ந்து பனி மூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அதிக அளவில் பனி மூட்டம் காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us