/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பைக்கில் நான்கு பேர் பயணம்அரசு பஸ் மோதி ஒருவர் பலி
/
பைக்கில் நான்கு பேர் பயணம்அரசு பஸ் மோதி ஒருவர் பலி
பைக்கில் நான்கு பேர் பயணம்அரசு பஸ் மோதி ஒருவர் பலி
பைக்கில் நான்கு பேர் பயணம்அரசு பஸ் மோதி ஒருவர் பலி
ADDED : பிப் 27, 2025 02:32 AM
பைக்கில் நான்கு பேர் பயணம்அரசு பஸ் மோதி ஒருவர் பலி
அந்தியூர்:அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி, கொங்காடை-கோவில் நத்தம் செல்லும் சாலையில், வேங்கை மர தொட்டி வளைவில், அரசு பஸ் - பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பைக் ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கடம்பூர் வனப்பகுதி, மாக்காம்பாளையத்தை சேர்ந்தவர் சித்தேஷ், 20, கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. கொங்காடையை சேர்ந்த ராஜ்குமார், 18, குமார், 18, விஜய், 18, ஆகிய நான்கு பேரும் யமாஹா பைக்கில் நேற்று காலை, 10:45 மணியளவில் கொங்காடை காலனியில் இருந்து, வேங்கை மர தொட்டி வளைவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே, அந்தியூரில் இருந்து கொங்காடை செல்வதற்காக, 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த சித்தேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பைக்கில் வந்த மூவரும், லேசான காயங்களுடன் தப்பினர். தலையில் ஹெல்மேட் அணியாமல், ஓரே பைக்கில் நான்கு பேர் பயணித்தது தெரியவந்துள்ளது.