/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு; சிறுவனுக்கு சிகிச்சை
/
குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு; சிறுவனுக்கு சிகிச்சை
குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு; சிறுவனுக்கு சிகிச்சை
குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு; சிறுவனுக்கு சிகிச்சை
ADDED : மார் 04, 2025 01:26 AM
குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு; சிறுவனுக்கு சிகிச்சை
சேந்தமங்கலம்:கொல்லிமலையில், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வாலிபர் உயிரிழந்தார். அதில்
மீதமிருந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை யூனியன், சித்துார் நாடு பஞ்சாயத்து, அவிரிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 24; இவர், நேற்று முன்தினம், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். அப்போது, அருகில் வசிக்கும் உறவினரின் மகன் பிரதீப், 10, என்ற சிறுவன் அங்கு வந்துள்ளான். அப்போது பழனிசாமி குடித்துவிட்டு வீசியிருந்த பாட்டிலில் மீதமிருந்த குளிர்பானத்தை எடுத்து குடித்துள்ளான். அப்போது அந்த குளிர்பானம் கசப்பாக இருந்ததால் கீழே துப்பியுள்ளான். பின் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்த சிறுவன் வாந்தி எடுத்துள்ளான். அப்போது அங்கு சென்று பார்த்த உறவினர்கள், பழனிசாமி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, '108' அவசரகால ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பழனிசாமியை பரிசோதனை செய்தனர். அப்போது, பழனிசாமி, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சிறுவன் பிரதீப், ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி, நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து செங்கரை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், பழனிசாமியின் உடல் பிரேத பரிசோதனையில், குளிர்பானத்தில் விஷத்தன்மை இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, செங்கரை போலீசார் கூறியதாவது: கொல்லிமலை, அவிரி காட்டை சேர்ந்த பழனிசாமி, குளிர்பானம் குடித்தவுடன் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும், குளிர்பானத்தை குடித்த சிறுவன் பிரதீப், வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து சிறுவன் பிரதீப், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த பழனிசாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், விஷம் கலந்திருந்தது தெரியவந்துள்ளது. அவர் குடித்த குளிர்பானம் காலாவதியானதால், விஷத்தன்மையாக மாறியதா? அல்லது பழனிசாமி விஷம் குடித்தாரா? என, பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.