/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியிருப்பு பகுதியில் சுவர் ஏறி குதித்த வடமாநில வாலிபரை பிடித்த மக்கள்

ADDED : மார் 07, 2025 02:46 AM
குடியிருப்பு பகுதியில் சுவர் ஏறி குதித்த வடமாநில வாலிபரை பிடித்த மக்கள்
பள்ளிப்பாளையம்:எஸ்.பி.பி., காலனி குடியிருப்பு பகுதியில், சுவர் ஏறி குதித்த வடமாநில வாலிபரை, பொது மக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனியில் ஏராளமான வீடுகள் உள்ளது. குடியிருப்பு பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் காகித ஆலை செக்யூரிட்டி ஒருவர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருவார். நேற்று மதியம், 25 வயதுடைய வாலிபர் ஒருவர் பாதுகாப்பு சுவர் ஏறி குதித்து, குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளார். இதை பார்த்த செக்யூரிட்டி மற்றும் அப்பகுதி மக்கள், அந்த வாலிபரை துரத்தி சென்று பிடித்தனர்.
பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரித்ததில், பிடிபட்ட வாலிபர் போதையில் இருந்ததும், அவர் ஒடிசாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. எதற்காக சுவர் ஏறி குதித்தார், வேறு இடத்தில் திருட்டில் ஏதாவது ஈடுபட்டுள்ளாரா என, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.