ADDED : செப் 07, 2024 07:53 AM
ப.வேலுார்: ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில், மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 5:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி ஹோமம் நடந்தது. அதன்பின், ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடினர். பின், ப.வேலுார் ஈஸ்வரன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள், காவேரி சாலை வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று மாலை, 6:30 மணிக்கு, கோபுர கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 11:00 மணிக்கு விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மகா மாரியம்மன், செல்வ விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு, திருப்பணிக்குழு, எட்டுப்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.