/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
/
பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 18, 2025 01:23 AM
பள்ளிப்பாளையம் : எலந்தக்குட்டை பஞ்சாயத்தை, பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்களும், விவசாய சங்கத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், எலந்தக்குட்டை பஞ்சாயத்தை, பள்ளிப்
பாளையம் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிடக்கோரி, அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், நேற்று காலை, 11:00 மணிக்கு வெப்படை பஸ் ஸ்டாப் பிரிவு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தனேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெருமாள், எலந்தக்குட்டை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில், 400க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் வெப்படை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, எலந்தக்குட்டை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வெங்கடாசலம் கூறுகையில், ''எலந்தக்குட்டை பஞ்சாயத்து, குக்கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பல குடும்பங்கள், தேசிய ஊரக வேலை திட்டத்தையே வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். நகராட்சியுடன் இணைத்தால், இந்த திட்டம் இல்லாமல் போய்விடும். வீட்டு வரி உயர்ந்து விடும். எனவே, நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிடும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.