/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்டம்மக்களிடம் குறைகளை கேட்ட கலெக்டர்

ADDED : ஜன 23, 2025 01:32 AM
'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்டம்மக்களிடம் குறைகளை கேட்ட கலெக்டர்
மல்லசமுத்திரம்,: மல்லசமுத்திரம் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில், நேற்று, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் உமா கலந்துகொண்டார். அவர், மாமுண்டி, பள்ளக்குழி அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கான மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மாமுண்டி பஞ்.,ல் பட்டு வளர்ச்சித்துறை மூலம் மானிய திட்டத்தில் பட்டு வளர்ப்பு கொட்டகை, தளவாட பொருட்கள், மல்பரி இலை ஆகியவற்றை மானியத்தில் பெற்று, தொழில் மேற்கொண்டு வருவதை கேட்டறிந்தார்.
செண்பகமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்ற அவர், இதுவரை வழங்கப்பட்ட நகைக்கடன், பயிர் கடன், திரும்ப செலுத்தப்பட்ட விபரங்கள், நிலுவையில் உள்ள கடன் விபரங்களை கேட்டறிந்தார். மேலும், இச்சங்கத்தில் செயல்பட்டு வரும், இ--சேவை மையத்தில் பயன்பெறும் பொதுமக்களின் எண்ணிக்கை, வழங்கப்படும் சான்றுகளின் விபரம் குறித்து கேட்டறிந்தார்.
பருத்திப்பள்ளி துணை சுகாதார நிலையம், ராமாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி புறநோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சிகிச்சை, மருந்துகளின் இருப்பு, வருகை பதிவேடு, ஆய்வக பதிவேடு குறித்து விசாரித்தார்.