ஆதரவற்ற மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்த்த கலெக்டர்
ஆதரவற்ற மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்த்த கலெக்டர்
ADDED : ஜன 24, 2025 01:11 AM
நாமக்கல் : திருச்செங்கோடு தாலுகாவில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், இரண்டு நாட்களாக சிறப்பு முகாம் நடந்து வருகிறது. கலெக்டர் உமா நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை, பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று காலை திருச்செங்கோடு வட்டத்தில், இரண்டாவது நாளாக அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். தினசரி சந்தையில் கள ஆய்வின்போது, அப்பகுதியில் ஆதரவின்றி இருந்த மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்க கலெக்டர் உமா உத்தரவிட்டார்.
விசாரணையில் அப்பெண் பெயர் குப்பாயி, 70, என்பதும், எவ்வித ஆதரவும் இன்றி தனியாக வசிப்பதும் தெரிந்தது. இதையடுத்து, குப்பாயியை மாவட்ட சமூக நல அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்கள் மீட்டு, பெருமாபாளையத்தில் இயங்கி வரும் பராமரிக்கும் கரங்கள்
இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
