வட்டார போக்குவரத்து ஆபீஸில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு
வட்டார போக்குவரத்து ஆபீஸில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2025 01:12 AM
பள்ளிப்பாளையம்,:பள்ளிப்பாளையம் அருகே, சில்லாங்காடு பகுதியில் உள்ள, குமார பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில், ஆர்.டி.ஓ., பூங்குழலி தலைமையில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, நேற்று தீ விபத்து குறித்து விழிப்புணர்வு நடந்தது.
குமாரபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக, முதலுதவி மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் வீட்டில் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, விபத்தில் அடிபட்ட நபர்களை காப்பாற்றுவது எப்படி என்பன போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் ஜெயச்சந்திரன்,
தண்டபாணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் நடத்தி காட்டினர்.இந்நிகழ்ச்சியில் போக்கு வரத்து அலுவலகம் வந்த ஓட்டுனர், பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு செய்ய வந்த நபர்கள், தகுதிச்சான்று புதுப்பிக்க வந்த நபர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
