/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அரசு கல்லுாரி முன் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
நாமக்கல் அரசு கல்லுாரி முன் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் அரசு கல்லுாரி முன் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் அரசு கல்லுாரி முன் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 29, 2025 01:24 AM
நாமக்கல் அரசு கல்லுாரி முன் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், :தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், உயர்கல்வித்துறையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள பல்கலை மானியக்குழுவில் கொண்டுவரப்பட்ட வரையறைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்கவேண்டும்.
சமூக நீதி அடிப்படையில் அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முறையிலான கல்வி முறைகள் மற்றும் அதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சங்க பொருளாளர் ரகுபதி உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.