/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வடகரையாத்துாரில் கிராம சபை கூட்டம் மக்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு

ADDED : பிப் 08, 2025 12:44 AM
வடகரையாத்துாரில் கிராம சபை கூட்டம் மக்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு
ப.வேலுார் : ப.வேலுார் அருகே, வடகரையாத்துார் கிராம பஞ்சாயத்து உள்ளது. கடந்த ஜன., 26ல் குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில், ஜேடர்பாளையத்தை கிராம பஞ்சாயத்தாக மாற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கிராம சபை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வடகரையாத்துார் பஞ்சாயத்து அலுவலகம் அருகே, சிறப்பு கிராம சபை கூட்டம், மகளிர் குழு தலைவர் சகுந்தலா தலைமையில், நேற்று நடந்தது. 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், கடந்த நான்கு மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து, பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, சந்தை திடலில் கல் பதிக்கும் பணியை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில்
செய்யாமல், இயந்திரங்களை கொண்டு வேலை செய்ததாக, தொடர்ந்து, குறைகளை சுட்டிக்காட்டினர். இதனால், கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, மக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என, அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரி, தணிக்கை அலுவலர் கமலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.