டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி நாமக்கல்லில் பா.ஜ., கொண்டாட்டம்
டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி நாமக்கல்லில் பா.ஜ., கொண்டாட்டம்
ADDED : பிப் 09, 2025 01:29 AM
டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி நாமக்கல்லில் பா.ஜ., கொண்டாட்டம்
நாமக்கல் :டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில், 27 ஆண்டுகளுக்குப்பின், பா.ஜ., பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதை அக்கட்சியினர், நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கியும், உற்சாகமாக கொண்டாடினர். மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர் ரவி, நகர தலைவர் தினேஷ், செயலாளர் வேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கும், பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். மாநில விவசாய அணி துணை தலைவர்கள் ராதிகா, சத்தியபானு, மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
