கோடையில் தீவன தட்டுப்பாட்டை போக்கவைக்கோல் கட்டுகளை வாங்கி இருப்பு வைப்பு
கோடையில் தீவன தட்டுப்பாட்டை போக்கவைக்கோல் கட்டுகளை வாங்கி இருப்பு வைப்பு
ADDED : பிப் 19, 2025 02:17 AM
கோடையில் தீவன தட்டுப்பாட்டை போக்கவைக்கோல் கட்டுகளை வாங்கி இருப்பு வைப்பு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதிகளில் புரட்டாசி மாத பட்டமாக, ஐ.ஆர்.50, ஆந்திரா பொன்னி, சூப்பர் பொன்னி உள்ளிட்ட ரகங்களின் நெல்லை, 2,000 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்திருந்தனர். விளைச்சல் முடிந்து தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. கோடைகாலம் துவங்க உள்ளதால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள், தீவன தட்டுப்பாட்டை போக்க, நெல் வயல்களுக்கு நேரடியாக சென்று, அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விலைக்கு வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர். இதற்கு ஏற்றவாறு, அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை, இயந்திரம் மூலம் உருண்டையாக கட்டி வைத்துள்ளனர். கடந்தாண்டு மழையில்லாததால், ஒரு கட்டு வைக்கோல், 350 ரூபாய் வரை விற்றது. இந்தாண்டு கொல்லிமலையில் பெய்த கன மழையால், ஏராளமான விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். இதனால் வைக்கோலுக்கு தட்டுப்பாடு இல்லாமல் எளிதாக கிடைக்கிறது. தற்போது வைகோல், ஒரு கட்டு, 270 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என, விவசாயிகள் தெரிவித்தனர்.
