/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரும் தை மாதம் நாமக்கல் ஆவினில்நெய் உற்பத்தி தொடங்கும்: எம்.பி.,
/
வரும் தை மாதம் நாமக்கல் ஆவினில்நெய் உற்பத்தி தொடங்கும்: எம்.பி.,
வரும் தை மாதம் நாமக்கல் ஆவினில்நெய் உற்பத்தி தொடங்கும்: எம்.பி.,
வரும் தை மாதம் நாமக்கல் ஆவினில்நெய் உற்பத்தி தொடங்கும்: எம்.பி.,
ADDED : பிப் 26, 2025 02:02 AM
நாமக்கல், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், மத்திய-, மாநில அரசு துறைகளின் நிதி உதவியோடு, 90 கோடி ரூபாய் மதிப்பில், நவீன பால் பதப்படுத்தும் ஆலை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகளை, எம்.பி., ராஜேஸ்குமார், கலெக்டர் உமா தலைமையில், நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், கடந்த, 2022-2023ல், 13 ஏக்கர் இடம் தேர்வு செய்து, நவீன பால் பதப்படுத்தும் ஆலை கட்டுமான பணி தொடங்கி, 60 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து, வரும், 2026 தை பொங்கல் அன்று, நாமக்கல் ஆவினில் நெய் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு அமைக்கப்படும் புதிய நவீன பதப்படுத்தும் ஆலைக்கு, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் விதிமுறையின்படி, அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன் மூலம் நேரடியாக, 100 பேரும், மறைமுகமாக, 300 பேரும் வேலை வாய்ப்பு பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய பால்வள வாரியத்தின், பெங்களூரு மண்டல தலைவர் கிஷோர், துணை பொது மேலாளர் சசிகுமார், மேலாளர் பிருத்வி, நாமக்கல் ஆவின் பொது மேலாளர் சண்முகம், துணை பொது மேலாளர் ராஜேஸ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

