/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பச்சியம்மன் கோவிலில் சிவராத்திரி விழாபக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

ADDED : மார் 01, 2025 01:39 AM
பச்சியம்மன் கோவிலில் சிவராத்திரி விழாபக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
நாமக்கல்:நாமக்கல் அருகே, பச்சியம்மன் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில், பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம், நைனாமலை அடிவாரம், பள்ளிப்பட்டியில் பச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.கோவிலில் பச்சியம்மன், மாசி பெரியசாமி, அபிஷேக பச்சியம்மன், விநாயகர், உமா மகேஸ்வரர், ரங்கநாதர், வள்ளி, தெய்வானை, முருகர், கன்னிமார்கள், முனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த, 26 இரவு பலகார பூஜை, 27ல் பொங்கல் பண்டிகை நடந்தது. தொடர்ந்து, நள்ளிரவு, 12:00 மணிக்கு, பூசாரிகள் சிலம்பாட்டம் ஆடி, உடுக்கை அடித்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களின் கையில் சுவாமியின் கத்தி கொடுக்கப்படும். அந்த கத்தியை பெற்றுக்கொண்டு மண்டியிட்டு அமரும் பக்தர்களின் தலையில், கோவில் பூசாரி தேங்காயை உடைப்பார்.
நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.