/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாதரையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கோவில் நிலத்தை மீட்க கோரி மனு
/
பாதரையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கோவில் நிலத்தை மீட்க கோரி மனு
பாதரையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கோவில் நிலத்தை மீட்க கோரி மனு
பாதரையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கோவில் நிலத்தை மீட்க கோரி மனு
ADDED : மார் 07, 2025 02:46 AM
பாதரையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கோவில் நிலத்தை மீட்க கோரி மனு
நாமக்கல்:பாதரை கிராமத்தில், தனியாரிடம் உள்ள கோவில் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என, கிராம மக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து, குமாரபாளையம் தாலுகா, சின்னார்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராமம், பாதரையிலும், எலந்தக்குட்டை கிராமம் காட்டுப்பாளையத்திலும், பாதரை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. பொன்காளியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவிலில், 18 பட்டி கிராம மக்கள் தரிசனம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். பூசாரிகள் கோவில் நிலங்களில் பயிர் செய்து, தங்களின் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதரையை சேர்ந்த தனியார் ஒருவர் கோவில் நிலங்களை முறைகேடான முறையில் தனது பெயருக்கு கிரையம்
செய்துள்ளார். தற்போது அந்த இடத்தில், சோலார் பவர் பிளான்ட்கள் அமைத்து வருகின்றனர். மேலும், அவர் நீர்வழி பொது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, சோலார் பவர் பிளான்ட்கள் அமைப்பதை தடை செய்து, தனியாரிடம் இருந்து, 13.5 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.