/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அலமேடு பகுதி மக்கள் அச்சம்
/
சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அலமேடு பகுதி மக்கள் அச்சம்
சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அலமேடு பகுதி மக்கள் அச்சம்
சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அலமேடு பகுதி மக்கள் அச்சம்
ADDED : ஏப் 12, 2025 01:24 AM
சுவர் ஏறி குதித்த மர்ம நபர் அலமேடு பகுதி மக்கள் அச்சம்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே அலமேடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், 25 வயதுடைய வாலிபர் ஒருவர் நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டபடி செல்கிறார். அதை தொடர்ந்து, ஒரு வீட்டிற்குள் இருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டு, காம்பவுன்ட் சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடுகிறார்.
இந்த காட்சிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளன.
இந்த வீடியோ, நேற்று காலையில் இருந்து, 'வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என, அலமேடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.