/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எண்ணெய் வித்து பயிர் மகசூல் திறன் அதிகரிக்க சிறப்பு திட்டம்
/
எண்ணெய் வித்து பயிர் மகசூல் திறன் அதிகரிக்க சிறப்பு திட்டம்
எண்ணெய் வித்து பயிர் மகசூல் திறன் அதிகரிக்க சிறப்பு திட்டம்
எண்ணெய் வித்து பயிர் மகசூல் திறன் அதிகரிக்க சிறப்பு திட்டம்
ADDED : ஜூலை 27, 2011 01:27 AM
பள்ளிபாளையம்: 'நடப்பு ஆண்டில், எண்ணெய் வித்து பயிர்களில் அதிக மகசூல் பெற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது' என, பள்ளிபாளையம் வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எண்ணெய் வித்து உற்பத்தி திட்டத்தின் கீழ், 2010-11ம் ஆண்டில் சான்று விதை உற்பத்தி வினியோகம் பாசனநீர் கொண்டு செல்லும் பைப்லைன் வினியோகம், ஜிப்ஸம், விசைத்தெளிப்பான் மற்றும் கைத்தெளிப்பான் வினியோகம் உள்பட பல்வேறு திட்ட இனங்களுக்கு, மானிய நிதி ஒதுக்கீடு பள்ளிபாளையம் வட்டாரத்துக்கு பெறப்பட்டுள்ளது. சிறு, குறு, ஆதிதிராவிட விவசாயிகள், மகளிர் விவசாயிகளுக்கு திட்ட முன்னுரிமை வழங்கப்படும். எண்ணெய் வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், தமது பகுதி உதவி வேளாண் அலுவலர்களை அணுகி தேவையான திட்ட உதவிகளை குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளிபாளையம் வேளாண் விரிவாக்க மையத்தையும் விவசாயிகள் அணுகி, திட்ட தேவை விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். எண்ணெய் வித்து பயிர்களான எள், நிலக்கடலை, ஆமணக்கு ஆகியவற்றின் மகசூல் திறனை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.