தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : செப் 14, 2024 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்,

பலபட்டறை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, நேற்று காலை, மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், குடங்களில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு நாமக்கல் வந்தனர். பின், மதியம் ஐயப்பன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடந்தது.

இன்று காலை, 8:30 மணிக்கு, 2ம் கால யாக பூஜை, மதியம், 12:40 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், அம்மன் பிரதிஷ்டை செய்தல், மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு கடம் புறப்பாடு, 7:40 மணிக்கு கோபுர மஹா கும்பாபிஷேகம், 8:00 மணிக்கு விநாயகர், பலபட்டறை மாரியம்மனுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, நாளை நாமக்கல் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us