/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
/
கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
ADDED : அக் 20, 2024 01:50 AM
கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு
முறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
நாமக்கல், அக். 20-
'கோழிப்பண்ணைகளில் உயிர்பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்' என, பண்ணையாளர்களை, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவு முறையே, 86 மற்றும் 71.6 டிகிரியாக காணப்பட்டது. அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும், மாவட்டத்தின் பல இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவு முறையே 89.6, 69.8 டிகிரியாக காணப்படும். காற்று தெற்கு திசையிலிருந்து மணிக்கு, 6 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில், இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை மேல் மூச்சுக் குழாய் அயற்சி நோய், ஈக்கோலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்நோயின் தாக்கத்தை குறைக்க கோழிப் பண்ணைகளில் உயிர்பாதுகாப்பு முறைகளை பண்ணையாளர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மழைக்காலமாக உள்ளதால், கோழி கொட்டகை, தீவன ஆலைகளில் மழைநீர் கசியாதவாறு சீரமைப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.