அழகுராய பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
அழகுராய பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
ADDED : ஜன 10, 2025 01:09 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம், : மல்லசமுத்திரத்தில் உள்ள, பழமை வாய்ந்த கோட்டை அழகுராய பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது.
மல்லசமுத்திரத்தில் உள்ள, 1,000ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அழகுராய பெருமாள் கோவிலில் இன்று (10) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோட்டை அழகுராய பெருமாளுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசி சிறப்பு லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணி பக்தர்களால் தொடங்கப்பட்டது.
இன்று அதிகாலை 4:00 மணிக்கு சுப்ரபாதம், மங்கள இசை, 4:30க்கு விஸ்வக்சேன ஆராதனை, தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் உற்சவர் புறப்பாட்டை தொடர்ந்து, 5:30 மணிக்கு வைகுண்ட சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். 6:00 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படும்.
