/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கர்நாடகா மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்புதமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு
/
கர்நாடகா மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்புதமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு
கர்நாடகா மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்புதமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு
கர்நாடகா மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்புதமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு
ADDED : ஜன 24, 2025 01:12 AM
நாமக்கல்,:கர்நாடகா தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் நிராகரித்ததை தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென் மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு ஏற்று, 67,792 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தது. தற்போது, 60 சதவீத பணிக்கு மேல் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகா அரசு அம்மாநில பாசன வசதிக்கு, தண்ணீர் கூடுதலாக தேவைப்படுகிறது மற்றும் பெங்களூர் நகர வளர்ச்சிக்கு குடிநீர் அதிகப்படியாக தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டு காவிரி நதிநீர் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமே சொந்தம் என்ற தவறான முறையில், கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மனுவில் கேட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த, 20ம் தேதி உச்சநீதிமன்ற அமர்வு அடங்கிய நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் தன்மையை அறிந்த உச்சநீதிமன்ற பெஞ்ச் அடங்கிய நீதிபதிகள் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்தனர். இதை, உழவர் பெருந்தலைவர்
நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மகிழ்ச்சிகரமாக வரவேற்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

