குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
ADDED : ஜன 24, 2025 01:12 AM
நாமக்கல், :நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், போலீசாரின் குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது.
வரும், 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா நடக்கிறது. கலெக்டர் உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி
வகுப்பு மரியாதையை ஏற்று, சிறப்பிடம் பெற்ற அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதை முன்னிட்டு, விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை, 6:00 மணிக்கு ஒத்திகை துவங்கியது. ஆயுதபடை டி.எஸ்.பி., சக்தி வேல் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, ஜெயசங்கரன் மற்றும் போலீசார் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.
அதேபோல் ஊர்காவல் படையினர், சாரண சாரணிய இயக்கம், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., என பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
