/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடம் மாறியதால் தடம் மாறி தவிக்கும் வாகன ஓட்டிகள்
/
இடம் மாறியதால் தடம் மாறி தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 29, 2025 01:18 AM
பள்ளிப்பாளையம்: திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் வாகனங்கள், ஆலாம்பாளையம் வழித்தடம் வழியாக பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பிரிவு சாலை வந்து, பாலம் வழியாக ஈரோடு செல்ல வேண்டும். ஆலாம்பாளையத்தில் இருந்து பள்ளிப்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேம்பாலத்தின் கீழே செல்லும் சாலையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையில் தான் வாகனங்கள் ஈரோடு சென்று வருகின்றன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், அம்புகுறி, ஊர் பெயர், கி.மீ.,யுடன் கூடிய வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு செல்ல, பள்ளிப்பாளையம் பிரிவு சாலை பகுதியில் வைக்க வேண்டிய வழிகாட்டி பலகையை, இடம் மாற்றி மாதாபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, 10 மீ., துாரத்தில் ஆர்.எஸ்., வழித்தடம் செல்கிறது. முன்னதாக, மாதா
புரத்தில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையை பார்த்துவிட்டு புதிதாக வரும் வாகன ஓட்டிகள், இந்த ஆர்.எஸ்., சாலையில் செல்கின்றனர். குறிப்பாக, இரவில் புதிதாக வரும் வாகன ஓட்டிகள், வழிமாறி சென்று அலைந்து திரிகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாதாபுரத்தில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையை, பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.