/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விசைத்தறிகளை நவீனமயமாக்க பட்ஜெட்டில்நிதி ஒதுக்க கோரி அமைச்சரிடம் முறையீடு

ADDED : பிப் 27, 2025 02:34 AM
விசைத்தறிகளை நவீனமயமாக்க பட்ஜெட்டில்நிதி ஒதுக்க கோரி அமைச்சரிடம் முறையீடு
ஈரோடு:தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுசாமி, கோவை மண்டல பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி மற்றும் செயலர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
அதில் கூறியிருப்பதாவது:கடந்த டிச., மாதம் சொத்து வரி உயர்வில் இருந்து, 'டேரிப்3ஏ2' மானிய மின் கட்டண பிரிவின் கீழ் இயங்கும், விசைத்தறி கூடங்களுக்கு விலக்கு அளிக்க கோரினோம். அதனை பரிசீலித்து கடந்த டிச., 27ல், விசைத்தறி தொழில் கூடங்களுக்கு உயர்த்தப்பட்ட சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அதே நாளில், தமிழக அரசின் மானிய மின்சாரம் உபயோகிக்கும், 'டேரிப்3ஏ2' விசைத்தறி கூடங்களுக்கு, வீடுகளில் விசைத்தறிகளை நிறுவி தொழில் நடத்தினால், பழைய சொத்து வரியே தொடர சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய மாற்றம் செய்து, வீடுகளில் என்பதை நீக்கி, 'டேரிப்3ஏ2' பிரிவில் இயங்கும் விசைத்தறி கூடங்களுக்கு என, மாற்றி வழங்க வேண்டும். மேலும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும். வரும் ஆண்டுக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்தை முன் கூட்டியே விரைவாக துவங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.