/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இயற்கை முறையில் பூச்சிவிரட்டிதயாரிக்க வேளாண் துறை யோசனை
/
இயற்கை முறையில் பூச்சிவிரட்டிதயாரிக்க வேளாண் துறை யோசனை
இயற்கை முறையில் பூச்சிவிரட்டிதயாரிக்க வேளாண் துறை யோசனை
இயற்கை முறையில் பூச்சிவிரட்டிதயாரிக்க வேளாண் துறை யோசனை
ADDED : மார் 03, 2025 01:33 AM
இயற்கை முறையில் பூச்சிவிரட்டிதயாரிக்க வேளாண் துறை யோசனை
நாமகிரிப்பேட்டை:இயற்கை முறையில் பூச்சி விரட்டியை தயாரிக்கும் முறை குறித்து, வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா மகோஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பயிர்களை பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம். இதற்கு முக்கியமாக, '3ஜி' கரைசலை தயாரிக்க வேண்டும். '3ஜி' கரைசல் தயாரிக்க, மூன்று வகையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு சம விகிதத்தில் எடுத்து தண்ணீர் சேர்க்காமல், சிறிது கோமியம் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின், இதனுடன் இரண்டு மடங்கு கோமியத்தை சேர்க்க வேண்டும்.
அதாவது, இந்த இடுபொருட்களை, தலா, ஒரு கிலோ என்ற அளவில் எடுத்துக்கொண்டால், இதனுடன், 6 லிட்டர் அளவு நாட்டு மாட்டு கோமியத்தைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதன்பின், இதனை ஒரு மண் பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி நன்கு கலந்து மூடி வைக்க வேண்டும். இதனுடன் தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதனை, 15 முதல், 20 நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேலைகளில் இதன் மூடியை திறந்து நன்கு கலக்கி விட வேண்டும். பிறகு இந்த கரைசலை வடிகட்டி ஆறு மாதங்களுக்கு சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
சேமித்து வைக்கும்பொழுது, அதில் சேகரிக்கப்படும் வாயுக்களை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கொள்கலனின் மூடியை திறந்து வெளியேற்றிய பின் மூட வேண்டும். இந்த கரைசலை அனைத்து வகையான பயிர்களுக்கும், ஐந்து சதவீதம் என்ற அளவில் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். அதாவது, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மி.லி., என்ற அளவில், '3ஜி' கரைசலை கலந்து பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். இதை, 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதால், பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். இந்த கரைசலின் முழு பலனை அடைய பூச்சி தாக்குதலுக்கு முன்பாக இதனை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.