/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதிதிராவிடர் நலத்துறை மெத்தனம்பிரச்னைக்குரிய நிலத்தில் தொழிலாளி சடலம் புதைப்பு
/
ஆதிதிராவிடர் நலத்துறை மெத்தனம்பிரச்னைக்குரிய நிலத்தில் தொழிலாளி சடலம் புதைப்பு
ஆதிதிராவிடர் நலத்துறை மெத்தனம்பிரச்னைக்குரிய நிலத்தில் தொழிலாளி சடலம் புதைப்பு
ஆதிதிராவிடர் நலத்துறை மெத்தனம்பிரச்னைக்குரிய நிலத்தில் தொழிலாளி சடலம் புதைப்பு
ADDED : மார் 03, 2025 01:36 AM
ஆதிதிராவிடர் நலத்துறை மெத்தனம்பிரச்னைக்குரிய நிலத்தில் தொழிலாளி சடலம் புதைப்பு
நாமகிரிப்பேட்டை:ஆதிதிராவிடர் நலத்துறை மெத்தன போக்கால், நாமகிரிப்பேட்டை அருகே சடலம் புதைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 70; தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அருகே உள்ள சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச்சென்றனர்.
அப்போது நிலத்தின் உரிமையாளர் சரவணன், 50, புதைக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சடலத்தை புதைக்க  முடியாமல் உறவினர்கள் தவித்து நின்றனர்.
தகவலறிந்த ராசிபுரம் தாலுகா  தலைமையிடத்து துணை தாசில்தார் விஜயலட்சுமி, நாமகிரிப்பேட்டை ஆர்.ஐ., பூர்ணிமா, டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் அம்பிகா சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சரவணன் கொடுத்த ஆவணங்களை பார்த்த அதிகாரிகள், தற்போது சடலத்தை புதைக்க அனுமதிக்குமாறும், ஒரு வாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து சரவணன் அனுமதித்தார். இதனால் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது சடலம் புதைத்துள்ள இடம் மற்றும் அரை ஏக்கர் விவசாய நிலத்தை, அப்பகுதி அருந்ததியர் மக்களின் சுடுகாட்டிற்காக, ஆதிதிராவிடர் நலத்துறை, 24 ஆண்டுகளுக்கு முன், சரவணனின் தந்தை கருப்பண்ணனிடம் கேட்டு, அதற்கான தொகையையும் செலுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
அதை ஏற்காத கருப்பண்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் சம்பந்தப்பட்டவர் அனுமதியின்றி நிலம் எடுக்க முடியாது என ஆதி திராவிட  நலத்
துறைக்கு அறிவுறுத்தியது. அதற்குள் வருவாய்த்துறை ஆவணங்களில் அந்த நிலம், மயான நிலம் என குறிப்பிடப்பட்டது.
இதை மாற்ற கருப்பண்ணன் மற்றும் அவரது மறைவுக்கு பின் சரவணனும், தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். இதுவரை மாற்ற முடியாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சரவணன் தொடர்ந்துள்ளார். இதில் ஆஜராக மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர், கலெக்டருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் முருகனிடம் கேட்டபோது, ''குறிப்பிட்ட நிலம் தொடர்பான பிரச்னையில், அரசாணையே வந்துவிட்டது.
ஆனால், ஆதிதிராவிடர்  நலத்துறை, அப்போது செலுத்திய பணத்தை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும். அதனால் காலதாமதம் ஆகிவிட்டது. அதேபோல் அக்கலாம்பட்டி மக்களுக்கு வேறு இடத்தில் மயானம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இது அனைத்தும் அப்பகுதி மக்களுக்கு தெரியும்,'' என்றார்.

