/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தண்டுமாரியம்மன் கோவில் தேர் திருவிழாகொட்டும் மழையில் பக்தர்கள் உற்சாகம்

ADDED : மார் 13, 2025 01:46 AM
தண்டுமாரியம்மன் கோவில் தேர் திருவிழாகொட்டும் மழையில் பக்தர்கள் உற்சாகம்
ராசிபுரம்:ராசிபுரம் அருகே, தண்டுமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், கொட்டும் மழையிலும் பக்தர்கள் உற்சாகமாக, தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. தேர் வடம் பிடிக்க தொடங்கிய சிறிது நேரத்தில், மழை கொட்ட தொடங்கியது. ஆனாலும், பக்தர்கள் உற்சாகத்துடன் தேரை இழுத்து வந்தனர்.
தேர் செல்லும் வீதியில், மேளதாளத்துடன் இளைஞர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மஞ்சள் நீராடுதலுடன் விழா முடிவடைகிறது.
* நாமகிரிப்பேட்டை வேணுகோபால் சுவாமி தேரோட்டம், நேற்று மதியம் தொடங்கியது. அப்போதிலிருந்து துாறல் மழை பெய்து கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கியமாக பெண்கள் ஏராளமானோர், தேரை இழுத்து சென்றனர். நாமகிரிப்பேட்டை அடுத்த வெள்ளக்கல்பட்டியில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி, நேற்று தேரோட்டம்
நடந்தது.