/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில்நெகிழி குப்பை சேகரிப்பு பணி தொடக்கம்

ADDED : மார் 27, 2025 01:56 AM
ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில்நெகிழி குப்பை சேகரிப்பு பணி தொடக்கம்
ப.வேலுார்:தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, 2025 ஜன., முதல், டிச., வரை, ஒவ்வொரு மாதமும், 4வது சனிக்கிழமையன்று, தமிழகம் முழுவதும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, நெகிழி பொருட்களை சேகரித்து அகற்றுதல், நெகிழி பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து தீவிர விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, ஜன., 25ல் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, கலெக்டர் உமா, ப.வேலுார் அடுத்த ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில், நெகிழி விழிப்புணர்வு மற்றும் நெகிழி கழிவு சேகரிப்பு இயக்கத்தின் கீழ், நெகிழி குப்பை சேகரிப்பு பணியை தொடங்கி வைத்து, அணை பூங்காவில் மரக்கன்று நடவு செய்தார்.
தொடர்ந்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்த செய்தி பலகையை திறந்து வைத்தார். மேலும், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லுாரியின், 'நெகிழி இல்லா நாமக்கல்' என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட குரு வாசகம் மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில், 75 கிலோ நெகிழி குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ரகுநாதன், செந்தில்குமார், கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.