தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மேம்பால பணி நிறைவு: பயன்பாட்டிற்குதிறக்க பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை

மேம்பால பணி நிறைவு: பயன்பாட்டிற்குதிறக்க பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை

மேம்பால பணி நிறைவு: பயன்பாட்டிற்குதிறக்க பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை


ADDED : ஏப் 05, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேம்பால பணி நிறைவு: பயன்பாட்டிற்குதிறக்க பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை

பள்ளிப்பாளையம்:நெடுஞ்சாலைத்துறை சார்பில், சென்னை- - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், 200 கோடி ரூபாயில், பள்ளிப்பாளையம் பகுதியில் 3 கி.மீ., துாரத்திற்கு மேம்பால கட்டுமான பணிகள், கடந்த, மூன்று ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்தன. ஆலாம்பாளையத்தில் துவங்கி, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பிரிவு சாலை வழியாக வந்து, ஒன்பதாம்படி பகுதியில் முடிகிறது. மேம்பால கட்டுமான பணிகள், கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் முழுமையாக முடிந்தன. இதையடுத்து, மேம்பாலத்தில் மின்விளக்கு, மழைநீர் செல்ல குழாய் பொருத்தம் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன. இந்த பணியும், இரண்டு வாரத்திற்கு முன் முடிந்தது. இதையடுத்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, திருச்செங்கோடு பஸ் உரிமையாளர் சங்க துணைத்தலைவர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், நேற்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''பள்ளிப்பாளையத்தில் நடந்து வந்த மேம்பால பணிகள் முழுமையாக முடிந்தன. இதனால், மேம்பாலத்தை திறக்க கோரியும், சேதமடைந்துள்ள ஆர்.எஸ்., சாலையை சீரமைக்க கோரியும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிட மும், நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோரிடமும், சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us