/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயன்பாட்டுக்கு வராத சுத்திகரிப்பு நிலையம்: ரூ.3 கோடி 'வீண்'
/
பயன்பாட்டுக்கு வராத சுத்திகரிப்பு நிலையம்: ரூ.3 கோடி 'வீண்'
பயன்பாட்டுக்கு வராத சுத்திகரிப்பு நிலையம்: ரூ.3 கோடி 'வீண்'
பயன்பாட்டுக்கு வராத சுத்திகரிப்பு நிலையம்: ரூ.3 கோடி 'வீண்'
ADDED : ஜன 29, 2025 01:23 AM
ராசிபுரம், :ராசிபுரத்தில், மூன்று கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் வீணாகியுள்ளது.
ராசிபுரம் நகராட்சி, கேனேரிப்பட்டி, 26வது வார்டு பகுதியில் ஏரி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் வரை, போதமலை, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், கோனேரிப்பட்டி ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. காலப்போக்கில் தண்ணீர் வந்த கால்வாய்களில் சாக்கடை, கழிவுநீர் வரத்தொடங்கியது. 26வது வார்டு, கோனேரிப்பட்டி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவரும் கழிவுநீர் தான் ஏரியில் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பில், 3.05 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கான பணி, 2023ல் தொடங்கப்பட்டு, கடந்தாண்டு முடிக்கப்பட்டது. ஆனால், தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே திட்டம் செயல்படவில்லை. சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் வந்து குட்டைபோல் தேங்கி நிற்கிறது. சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால், துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி கொசு, புழுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது.
இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

