/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு உதவி வக்கீல் பணி தேர்வுமாவட்டத்தில் 53 பேர் பங்கேற்பு
/
அரசு உதவி வக்கீல் பணி தேர்வுமாவட்டத்தில் 53 பேர் பங்கேற்பு
அரசு உதவி வக்கீல் பணி தேர்வுமாவட்டத்தில் 53 பேர் பங்கேற்பு
அரசு உதவி வக்கீல் பணி தேர்வுமாவட்டத்தில் 53 பேர் பங்கேற்பு
ADDED : பிப் 23, 2025 02:03 AM
அரசு உதவி வக்கீல் பணி தேர்வுமாவட்டத்தில் 53 பேர் பங்கேற்பு
நாமக்கல்:நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசு தேர்வாணையம் மூலம், அரசு உதவி வக்கீல் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்விற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, 69 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வை, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது, தேர்வு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியதா, தேர்வு எண்களை வினாத்தாளில் சரியாக எழுதி உள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்தார். இத்தேர்வில், 53 தேர்வர்கள் மட்டுமே பங்கேற்றனர். 16 பேர் கலந்துகொள்ளவில்லை. இது, 76.81 சதவீதமாகும்.