/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 29, 2024 02:21 AM
நாமக்கல்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் செல்வராசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கை, பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.
ஒன்றிய அளவில் மட்டும், இடமாறுதல் கலந்தாய்வு நடக்கும் வகையில், திருத்திய கால அட்டவணை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.