/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'தி.மு.க.,வை அகற்ற அனைத்து கட்சியினரும் போராடணும்'
/
'தி.மு.க.,வை அகற்ற அனைத்து கட்சியினரும் போராடணும்'
'தி.மு.க.,வை அகற்ற அனைத்து கட்சியினரும் போராடணும்'
'தி.மு.க.,வை அகற்ற அனைத்து கட்சியினரும் போராடணும்'
ADDED : ஜன 05, 2025 01:49 AM
நாமக்கல், ''தி.மு.க., அரசு தமிழகத்திற்கு தேவையில்லை என்ற, 'சிங்கிள் பாயின்ட்' அஜன்டாவோடு, அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார்.
பா.ஜ., சார்பில், கிழக்கு மாவட்ட தலைவர் பதவிக்கான கருத்து கேட்பு கூட்டம், நேற்று நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மணி முன்னிலை வகித்தார். பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசியதாவது:
எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு இருப்பதால், தி.மு.க.,வை அசைக்க முடியாது என்ற ஆணவப்போக்கோடு ஆட்சி நடத்தி வருகிறது. அதனால் தான், தமிழகம் முழுவதும் குற்றச்சம்பவங்கள், கொடுமைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அ.தி.மு.க., - பா.ம.க., - நா.த.க., - த.வெ.க., போன்ற கட்சிகள் தனித்தனியாக போராடுகின்றன. பாலியல் வன்கொடுமைகளை ஆதரிக்கின்ற, தி.மு.க.,வை ஆட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். தி.மு.க., அரசு தமிழகத்திற்கு தேவையில்லை என்ற, 'சிங்கிள் பாயிண்ட்' அஜன்டாவோடு போராட்ட களத்தில் ஒருமுகப்படுத்தி நடத்த வேண்டும். இதற்கு மூத்த அரசியல்வாதி ராமதாஸ் வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

