/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'ஆன்லைன்' மோசடி போலீசார் விழிப்புணர்வு
/
'ஆன்லைன்' மோசடி போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஜன 05, 2025 01:51 AM
'ஆன்லைன்' மோசடி போலீசார் விழிப்புணர்வு
ராசிபுரம்: ராசிபுரத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் சார்பில் ஆன்லைன் பண மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ராசிபுரம் எஸ்.ஐ., சுரேஷ், வாடிக்கையாளர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆன்லைன் மூலம் எவ்வாறு பணமோசடி செய்கின்றனர், அதில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, மீறி பணம் இழந்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, எஸ்.ஐ., தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் கூறினார். மேலும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

