/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோடு எஸ்.கே.வி. வித்யாஷ்ரம்பள்ளி மாணவர்கள் உலக சாதனை
/
திருச்செங்கோடு எஸ்.கே.வி. வித்யாஷ்ரம்பள்ளி மாணவர்கள் உலக சாதனை
திருச்செங்கோடு எஸ்.கே.வி. வித்யாஷ்ரம்பள்ளி மாணவர்கள் உலக சாதனை
திருச்செங்கோடு எஸ்.கே.வி. வித்யாஷ்ரம்பள்ளி மாணவர்கள் உலக சாதனை
ADDED : ஜன 10, 2025 01:26 AM
திருச்செங்கோடு. திருச்செங்கோடு, எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி, 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இப்பள்ளி மாணவர்கள், உலக சாதனை படைத்துள்ளனர்.
எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய, இரு உலக சாதனை
நிறுவனங்கள் பள்ளிக்கு சான்றிதழை வழங்கியதையடுத்து, பள்ளி நிர்வாகம் கொண்டாடியது. உலக சாதனை நிகழ்ச்சிக்கு பள்ளி தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சண்முகப்பிரியா வரவேற்றார்.
செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளஸ் 2 வரை பயிலும் 420 மாணவ, மாணவியர் தாங்கள் கற்கும் அறிவியல் பாடத்திலிருந்து சூத்திரங்கள், வரையரைகள், கருத்துகள் போன்றவைகளை ஒருவர் பின் ஒருவராக இடைவிடாமல் சரியாக ஒப்புவித்து, மிக அதிக பங்கேற்பாளர்கள், 10 மணி நேரத்தில் அறிவியல் கருத்துகள், வரையரை மற்றும் சூத்திரங்களை ஒப்புவித்தல் எனும் உலக சாதனையை படைத்துள்ளனர்.
உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள், 10 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்து சான்றிதழ்களை அன்றே வழங்கினர். கல்வி ஆலோசகர் பிரேமலதா, துணை முதல்வர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பேசினர்.

