/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சவுண்டம்மன் கோவிலில் கத்தி போடும் விழா
/
சவுண்டம்மன் கோவிலில் கத்தி போடும் விழா
ADDED : ஜன 15, 2025 12:23 AM
சவுண்டம்மன் கோவிலில் கத்தி போடும் விழா
குமாரபாளையம், :குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழா, கடந்த, 3ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், காவிரி ஆற்றி
லிருந்து சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, காவிரி ஆற்றிலிருந்து சாமுண்டி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், குதிரை மீது அம்மனை அமர வைத்து, காவிரி ஆற்றி லிருந்து கலைமகள் வீதி, சேலம் சாலை, புத்தர் வீதி, தம்மண்ணன் வீதி வழியாக, ராஜ வீதியில் உள்ள கோவில் வரை, வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அழைத்து வந்தனர்.
அப்போது, வழிநெடுக பக்தர்கள் பெருமளவில் கூடி நின்று அம்மனை வணங்கினர். தொடர்ந்து, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் துாள் பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலை, பெரிய பொங்கல் விழா நடந்தது. இன்று இரவு, ஜோதி திருவீதி உலா, நாளை காலை மஞ்சள் நீர் திருவீதி உலா, இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.