/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நவீன கட்டண கழிப்பிடத்தில் அலப்பறைபெண்கள் அறையில் ஆண்களால் அதிருப்தி

ADDED : ஜன 23, 2025 01:32 AM
நவீன கட்டண கழிப்பிடத்தில் அலப்பறைபெண்கள் அறையில் ஆண்களால் அதிருப்தி
நாமகிரிப்பேட்டை:  நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் உள்ள நவீன கட்டண கழிப்பிடத்தில், பெண்கள் அறைக்குள் ஆண்களை அனுமதிப்பதால், அப்பகுதி பெண்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., பஸ் ஸ்டாண்டில் நவீன கட்டண கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்களுக்கு, 4 அறைகளும், பெண்களுக்கு, 4 அறைகளும் உள்ளன. இந்நிலையில், கழிப்பிடத்தில் ஆண்கள் அறை நிரம்பிவிட்டால், பெண்கள் அறைக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெண்கள் அறைக்குள் செல்லும்போது, ஆண்கள் அரைகுறை ஆடையுடன் வெளியே வருகின்றனர். இதனால், பெண்கள் அதிருப்தியடைகின்றனர்.
சில நேரங்களில், மது போதையில் பெண்கள் அறையை வந்து தட்டுகின்றனர். போதையில் இருக்கும் ஆண்களை பார்த்து, பெண்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியேற வேண்டியுள்ளது. இதுகுறித்து டவுன் பஞ்., நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பலமுறை புகாரளித்தும் பயனில்லை. பெண்கள் அறைக்குள் ஆண்களை அனுமதிக்க கூடாது என, பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, 'பொதுக்கழிப்பிடத்திற்கு ஆண்கள் தான் அதிகம் வருகின்றனர். ஆண்கள் அறை நிரம்பி விடுவதால், பெண்கள் அறைக்கு செல்கின்றனர். எனவே ஆண்களுக்கு கூடுதல் கழிவறை கட்டித்தரக்கோரி, டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை' என்றார்.