/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருப்பதியில் உயிரிழந்தவரின் மகனிடம் நிதியுதவி வழங்கல்
/
திருப்பதியில் உயிரிழந்தவரின் மகனிடம் நிதியுதவி வழங்கல்
திருப்பதியில் உயிரிழந்தவரின் மகனிடம் நிதியுதவி வழங்கல்
திருப்பதியில் உயிரிழந்தவரின் மகனிடம் நிதியுதவி வழங்கல்
ADDED : ஜன 25, 2025 01:15 AM
திருப்பதியில் உயிரிழந்தவரின் மகனிடம் நிதியுதவி வழங்கல்
பள்ளிப்பாளையம், : ஆந்திரா மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில், கடந்த, 8ல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்காக இலவச டோக்கன் வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சேலத்தை சேர்ந்த மல்லிகா உட்பட, 6 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, ஆந்திரா அரசு அறிவித்தது.
மல்லிகாவின் மகன் ரமேஷ், பள்ளிப்பாளையம் அருகே வெப்படை அடுத்த தண்ணீர் பந்தல்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று மதியம், திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள், தண்ணீர் பந்தல்பாளையம் பகுதிக்கு வந்து, மல்லிகாவின் மகன் ரமேஷிடம் நிதியுதவி வழங்கினர். மேலும், நெல்லுார் மாவட்டம், கோவூர் எம்.எல்.ஏ., வேமி ரெட்டி பிரசாத் சார்பில், 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினர்.