/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சவுடேஸ்வரி அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம்
/
சவுடேஸ்வரி அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம்
ADDED : ஜன 30, 2025 01:46 AM
சவுடேஸ்வரி அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம்
எருமப்பட்டி :எருமப்பட்டி யூனியன், என்.புதுக்கோட்டை பஞ்சாயத்து, ஒசக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று, தை அமாவாசையையொட்டி, சவுடேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின், சவுடேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.